பாகிஸ்தானில் கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி; இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்
லாகூர்,பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
