மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
மும்பை, மராட்டியத்தில் மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சி நாட்டிலேயே பணக்கார மாநகராட்சியாக அறியப்படுகிறது. காரணம், இங்கு இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மதிப்பு ரூ.74 ஆயிரம் கோடியாகும். இது சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட் மதிப்பை விட அதிகம். இதனால் மும்பை மாநகராட்சியை கைப்பற்ற கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவியது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றுப்பட்ட சிவசேனா அதிகாரம் செலுத்தி வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இரு அணிகளாக உடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியின் பெயர், சின்னம் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வசம் வந்தது. உத்தவ் சிவசேனா என்ற பெயரில் உத்தவ் தாக்கரே கட்சி நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் பா.ஜனதாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதேபோல சுமார் 20 ஆண்டு காலம் அரசியல் எதிரிகளாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி வைத்தனர். காங்கிரஸ் கட்சி, வஞ்சித் பகுஜன் அகாடி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இதனால் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. தாக்கரே ஆதிக்கத்தை தகர்த்த பாஜக இந்தநிலையில் 114 வார்டுகளில் வெற்றிபெறும் கூட்டணி, நாட்டின் பணக்கார மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் என்ற நிலையில், தேர்தல் முடிந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி கண்டது. இதில் பா.ஜனதா மட்டும் 88 இடங்களை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 28 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் சிவசேனா 65 வார்டுகள், நவநிர்மாண் சேனா 8 வார்டுகள் என இந்த கூட்டணி கட்சிகள் 73 இடங்களை பிடித்து தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெறும் 14 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மும்பை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. இங்கு முதன் முறையாக பா.ஜனதா மேயர் பதவி ஏற்க உள்ளார். 25 ஆண்டு காலம் மாநகராட்சியை தன்வசப்படுத்தி வைத்திருந்த தாக்கரேக்களின் கொடி மும்பை மாநகராட்சி கோட்டையில் இருந்து இறக்கப்பட்டு உள்ளது. மும்பையில் தாக்கரேக்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி மாநகராட்சியை தங்கள் கூட்டணி கைப்பற்றியதால் பா.ஜனதாவினர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். வெற்றியை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். இதேபோல துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் செல்வாக்கு மிகுந்த தானே மாநகராட்சியிலும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு சிவசேனா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருப்பதால், அக்கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட உள்ளது. முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோரின் சொந்த ஊர் உள்ள நாக்பூர் மாநகராட்சியையும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் கைப்பற்றி உள்ளது. பாஜக அபார வெற்றி மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் பா.ஜனதா கூட்டணி 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளில் அபார வெற்றி கண்டுள்ளது. ஆனால் 25 மாநகராட்சிகளில் பா.ஜனதா மேயர் பதவி ஏற்பார்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். காங்கிரஸ் கட்சி லாத்தூர், சந்திராப்பூர், பிவண்டி, பர்பானி, கோலாப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த மாநகராட்சிகளின் மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. உத்தவ் சிவசேனா, ராஜ்தாக்கரே கட்சிகளின் கூட்டணியால் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
