அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்த தெரு நாய்; பக்தர்கள் வழிபாடு - வைரலான வீடியோ
லக்னோ, உத்தர பிரதேசத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், கிராமவாசிகள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தெரு நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்துள்ளது. அதுவும் இடதுபுறத்தில் சுற்றி வந்துள்ளது. பல மணிநேரம் இதுபோன்று நடந்துள்ளது. சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இது நீடித்துள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதன்பின்னர் 2 நாள் கழித்து துர்க்கை அம்மனை சுற்றி, சுற்றி வர தொடங்கியது. இதில் சோர்ந்து போன அந்த நாய் ஒரு காலை தூக்கியபடி சென்றுள்ளது. பலரும் அதனை சாமியின் வடிவம் என கூறி வழிபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மருத்துவ குழுவினர் தகவல் கிடைத்து சென்று தெரு நாயை பரிசோதித்தனர். இதில், நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அது மருத்துவ பாதிப்புக்கு உட்பட்டு உள்ளது என தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். உடல்நலம் பாதித்த அதற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சாமியாக நினைத்து பலரும் வழிபட்ட சம்பவத்திற்கு சிலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர். A stray dog started circling a Hanuman idol inside a temple in Nandpur village of Bijnor district in Uttar Pradesh. The video of the incident was widely shared on social media and began drawing crowd of devotees. pic.twitter.com/NTCXuA4nSpNow, devotees have started treating the dog as some spiritual incarnation with a priest sitting next to him inside the temple. The stray is now resting on a comfy mattress with devotees making a beeline to touch his feet. https://t.co/b6bSSFFtvP pic.twitter.com/xmZgSSvKkS




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
