வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கொல்கத்தா, நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரெயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரெயில் நிலையம் வரை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 958 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரெயில் சேவை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 958 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் கடக்கிறது. நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் ரெயிலாக இது பார்க்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய 3-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,299, 2-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,970 மற்றும் முதல் ஏசி பெட்டிக்கு ரூ.3,640 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. பயணிகள் டிக்கெட் எடுக்கும் போது ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இந்த ரெயிலில் 3-டைர் ஏசி பெட்டிகள் 11, 2-டைர் ஏசி பெட்டிகள் 4, முதல் ஏசி பெட்டி ஒன்று என மொத்தம் 16 நவீன பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
