இந்தூரில் விஷமாக மாறிய குடிநீர்; உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு - ராகுல் காந்தி
இந்தூர், இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் குடிநீரே விஷமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தூரில் உள்ள பாகீரத்புராவில், கடந்த மாதம் சுமார் 1,400 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட பகுதியில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாகீரத்புரா பகுதியில் ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு பொறியாளர் பணீநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தூரில் குடிநீர் விஷமாக மாறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்று பாகீரத்புராவிற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சுத்தமான குடிநீர் என்பது பொது உரிமை. இந்தூர் ஒரு ஸ்மார்ட் நகரம். ஆனால் சுத்தமான குடிநீர் கூட இல்லை. மக்கள் மிரட்டப்படுகிறார்கள். மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதும் மாசுபாட்டைக் குறைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அரசாங்கம் இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை. இது இந்தூரை மட்டும் பற்றியது அல்ல. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இது நடக்கிறது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் இந்தூரில் மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடித்து இறந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவையும் போதுமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இந்தூரில் ஏற்பட்ட குடிநீர் பேரழிவிற்கு அரசாங்கத்தில் உள்ள ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். மேலும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பாகும். மக்கள் வேதனையில் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். நாங்கள் பகீரத்புராவின் மக்களுடன் நிற்கிறோம். குற்றவாளிகளைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் தொடர்ந்து போராடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
