அருணாச்சலபிரதேசம்: பனியில் உறைந்த ஏரியில் மூழ்கி கேரள சுற்றுலா பயணிகள் இருவர் பலி
இட்டா நகர்,கேரள மாநிலத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் அருணாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், அருணாச்சலபிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள சலா ஏரிக்கு 7 பேரும் சென்றுள்ளனர். சலா ஏரி பனியில் உறைந்து காணப்பட்டது. அப்போது, ஒரு இளைஞர் உறைந்த ஏரியில் நடந்து சென்று செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென ஏரியில் பனிப்படலம் உடைந்துள்ளது. இதனால் அந்த இளைஞர் உறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக இளைஞர்கள் 6 பேரும் அந்த இளைஞரை காப்பாற்ற ஏரிக்குள் குதித்துள்ளனர். அப்போது, ஏரிக்குள் விழுந்த அந்த இளைஞர் நீந்தி கரையை அடைந்துள்ளார். ஆனால், அந்த இளைஞரை காப்பற்ற ஏரிக்குள் குதித்த 6 இளைஞர்களில் பிரகாஷ் (வயது 24), மாதவ் (வயது 26) ஆகிய 2 பேர் ஏரி நீரில் மூழ்கி மாயமாகினர். எஞ்சிய அனைவரும் கரையை அடைந்தனர். இதையடுத்து, ஏரியில் மூழ்கிய இரு இளைஞர்கள் குறித்து ராணுவம், போலீசார், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நேற்று நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் இருந்து பிரகாஷ் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, இன்று காலை நடைபெற்ற மீட்புப்பணியில் மாதவ்வின் உடலும் மீட்கப்பட்டது. உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்குப்பின் 2 பேரின் உடல்களும் சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
