ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது - ராகுல்காந்தி
புதுடெல்லி, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் மார்க்கர் பேனாக்களில் பயன்படுத்தப்பட்ட அழியாத மையின் தரம் குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த மை மூலம் வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை எளிதில் அகற்ற முடியும் என்றும், இது போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘உண்மை என்ன என்பதை பார்க்காமல் மாநில தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என கூறுவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டதையே காண்பிக்கிறது. வாக்கு திருட்டு என்பது தேசவிரோத செயல்’ என கூறி உள்ளார். இதற்கிடையே, ‘2011-ம் ஆண்டு முதல் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் இந்த பேனாக்களை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.Election commission gaslighting citizens is how trust has collapsed in our democracy. Vote Chori is an anti-national act. pic.twitter.com/3FZKkDPwDg




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
