போலந்து துணை பிரதமர் இன்று இந்தியா வருகை
புதுடெல்லி, போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், போலந்து துணை பிரதமர் ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று இந்தியாவுக்கு வருகிறார். இதன்பின்பு, நாளை நடைபெற உள்ள ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வார். இதன் பின்னர் அன்றைய தினமே டெல்லிக்கு செல்வார். வருகிற 19-ந்தேதி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுவார். இதன்பின்னர், டெல்லியில் இருந்து சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்வார். பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்டில் போலந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தியா மற்றும் போலந்து நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதுடன், அதனை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, எதிர்கால மூலோபாய கூட்டாண்மையை செயல்படுத்துவதற்கான இருதரப்பு கூட்டாண்மை மற்றும் 2024-2028 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் ஆகியவை பற்றிய கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இந்தியா உள்ளது. இந்த சூழலில், போலந்து துணை பிரதமர் சிகோர்ஸ்கியின் வருகை அமைந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
