பிரதமர் மோடி அசாம் பயணம்; ரூ.6,950 கோடி மதிப்பிலான திட்டத்தின் பூமி பூஜையில் பங்கேற்பு
கவுகாத்தி, பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதில், பூமி பூஜை, போடோ சமூக நடன நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று அசாமுக்கு புறப்பட்டு செல்வார். அவர் இன்று மாலை 6 மணியளவில் கவுகாத்தியில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெறும் பாரம்பரியமிக்க போடோ கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். போடோ சமூகத்தின் பாரம்பரிய செறிவை கொண்டாடும் வகையில், 23 மாவட்டங்களை சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடுவர். இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆடும், தனித்துவ நாட்டுப்புற நடனம் என்ற பெருமையை பகுரும்பா நடனம் பெற்றுள்ளது. இது மிக பெரிய கலாசார நிகழ்ச்சியாக இருக்கும். இதன்பின்னர் நாளை காலை 11 மணியளவில் கலியாபோர் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, ரூ.6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தட திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள இருக்கிறார். 86 கி.மீ. நீளம் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் ஒன்றாக கலியாபோர் மற்றும் நுமலிகார் பிரிவுக்கு இடையே இது அமையும். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
