ஓடிடிக்கு வரும் பிளாக்பஸ்டர் படம் 'ஷம்பாலா'...எப்போது, எதில் பார்க்கலாம்?
சென்னை,தெலுங்கு ஹீரோ ஆதி சாய்குமார் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு வெற்றி படத்தை பெற்றிருக்கிறார். அவருக்கு வெற்றியைக் கொடுத்த படம் ’ஷம்பாலா’. இந்தப் படத்தை, புது இயக்குநர் யுகந்தர் முனி இயக்கியுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த இந்தப் படம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கதை வழக்கமானதாக இருந்தாலும், அதை இயக்கிய விதம் மிகவும் புதியதாக இருந்தது. அதனால் இந்தப் படத்துடன் பார்வையாளர்கள் இணைக்கப்பட்டனர். சுமார் ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து, ஆதி சாய்குமாரின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது இந்தப் படம் ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராகி உள்ளது. ஷம்பாலா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஆஹா வாங்கியுள்ளது. இந்நிலையில், ’ஷம்பாலா’ படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 22ம் தேதி முதல் இப்படம் ஆஹாவில் வெளியாக உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
