ஆக்கி இந்தியா லீக்: ராஞ்சி அணி 3-வது வெற்றி
ராஞ்சி, 8 அணிகள் இடையிலான 7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் ராஞ்சி ராயல்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராஞ்சி ராயல்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ராஞ்சி அணியில் மன்மீத் சிங் ராய் (14-வது நிமிடம்), டாம் பூன் (20-வது மற்றும் 22-வது நிமிடம்), மன்தீப் சிங் (47-வது நிமிடம்) கோலடித்தனர். சூர்மா அணியில் ஜீத் பால் 52-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 5-வது ஆட்டத்தில் ஆடிய ராஞ்சி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சூர்மா கிளப் அணிக்கு 3-வது தோல்வியாகும். ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் (மாலை 5 மணி), கலிங்கா லான்செர்ஸ் - எஸ்.ஜி.பைப்பர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
