திவ்ய பாரதியின் ‘ஆசை’...நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
சென்னை,ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர், திவ்ய பாரதி நடிக்கும் ‘ஆசை’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'இஷ்க்'. தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை 'ஜீரோ' புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார். இந்த படத்துக்கு 'ஆசை' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூர்ணா, லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் ‘ஆசை’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என போஸ்டர் வெளியீட்டு படக்குழு தெரிவித்துள்ளது.A post shared by Passion Studios (@passionstudiosoffl)




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
