ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்; 100 பேர் பலி
ஜோகன்ஸ்பெர்க்,ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
