மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சைக்கிளில் சென்ற சிறுவன் பலி
காந்தி நகர்,குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஜஹாங்கீராபாத் பகுதியை சேர்ந்தவர் அமோல் போர்சி. இவரது மகன் ரஹனேஷ் (வயது 8). இந்நிலையில், சிறுவன் ரஹனேஷ் இன்று தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது, அப்பகுதியில் பட்டத்தில் உள்ள மாஞ்சா நூல் சிறுவன் ரஹனேசின் கழுத்தை அறுத்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக, சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ரஹனேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் நேற்று மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது பட்டம் விடுவது வழக்கமாகும். அவ்வாறு விடப்பட்ட பட்டத்தில் இருந்து மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ரஹனேஷ் உயிரிழந்துள்ளான் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
