இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ரூ.3½ லட்சம் கோடியாக உயர்வு
புதுடெல்லி,உலக அளவில் பல்வேறு நெருக்கடிகள், நிலையற்ற தன்மை போன்ற அசாதாரண சூழல்களிலும் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில் கடந்த மாதத்தில் இருந்த நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி நிலவரத்தை மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் வெளியிட்டார். அதன்படி இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த மாதம் 1.87 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதாவது 38.5 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.3.47 லட்சம் கோடி) ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. கடந்த ஏப்ரல்-டிசம்பர் மாத காலகட்டத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதியும் 2.44 சதவீதம் அதிகரித்து 330.29 பில்லியன் டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேநேரம் நாட்டின் இறக்குமதியும் கடந்த மாதத்தில் 58.43 பில்லியன் டாலரில் இருந்து 63.55 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது. மேலும் அந்த மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 25 பில்லியன் டாலர் என்றும் அகர்வால் தெரிவித்தார். இந்த நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 850 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.76 லட்சம் கோடி) தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
