அமெரிக்காவில் அதிர்ச்சி: 2 மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்
நியூயார்க், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் ஹில்ஸ்பாரோ நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பிரியதர்ஷினி நடராஜன் (வயது 35). இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வேலை முடிந்து நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய கணவர் நடராஜனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய 2 மகன்களும் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் வந்து, விசாரித்து இருக்கின்றனர். மகன்களை, மனைவி ஏதோ செய்து விட்டார் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், 2 பேரும் உயிரிழந்து விட்டனர் என டாக்டர்கள் கூறினர். இதனை தொடர்ந்து போலீசார், 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சட்டவிரோத வகையில் ஆயுதங்களை பதுக்கி வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
