கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும், வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா இன்று பறிமுதல் செய்துள்ளது. கரீபியன் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையதாகும். மேலும், இந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்தது. இந்த கப்பலை பறிமுதல் செய்ததன் மூலம் அமெரிக்கா பறிமுதல் செய்த வெனிசுலா மற்றும் அந்நாட்டில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடைய கச்சா எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
