பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு சில்க் போர்டில் இருந்து சர்வதேச விமான நிலையம் இடையே நீல நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் அகரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்தது. அப்போது ராட்சத கிரேன் மூலம் இரும்பு கார்டரை தூக்கும் பணி நடந்தது. 100 டன் எடையிலான இரும்பு கார்டரை தூக்கும்போது கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 ஜாக்குகளில் ஒரு ஜாக் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த ராட்சத கிரேன் திடீரென கவிழ்ந்து விழுந்தது. இதில் கிரேன் வாகனத்தின் முன்பகுதி மேலே தூக்கியது. உடனே கிரேன் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த கிரேன் 500 டன் எடை தூக்கும் திறன் கொண்டதாகவும், ஜாக் துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் என்ஜினீயர் தெரிவித்துள்ளார். மேலும் எச்.எஸ்.ஆர். போக்குவரத்து போலீசாரும் அங்கு சென்று பார்வையிட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
