கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து 2 பேர் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவரின் செல்போனை கேட்டனர். அப்போது முகமூடி அணிந்து வந்த நீங்கள் யார்? என்று விஜயலட்சுமி கேட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், மூதாட்டியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்தனர். அப்போது விஜயலட்சுமி நகையின் ஒரு பகுதியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் கிடைத்தது வரை லாபம் என மீதமுள்ள 2½ பவுன் நகையை பறித்துக்கொண்டு முகமூடி திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், முகமூடி திருடர்கள் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து கூடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகமூடி திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் 1-ம் மைல் பகுதியில் உள்ள காய்கறி கடையில் பட்டப்பகலில் ரூ.1 லட்சத்தை கொள்ளையர்கள் திருடி சென்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருட்டு சம்பவங்களில் வெளி நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
