“எகோ” திரைப்பட குழுவுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு

  தினத்தந்தி
“எகோ” திரைப்பட குழுவுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு

‘கிஷ்கிந்தா காண்டம்’ பட இயக்குனர் தின்ஜித் அய்யாதன் இயக்கிய படம் ‘எகோ’ . இதில், ‘படக்கலம்’ படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் சந்தீப் பிரதீப் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் அசோகன், பியானா மோமின், என்.ஜி. ஹங் ஷென், சிம் ஸி பீ, சாஹிர் முகமது மற்றும் ரஞ்சித் சேகர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் டிசம்பர் 31ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.A post shared by Beyond Northeast (@beyondnortheast)இந்நிலையில், ‘எகோ’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், “மலையாள திரைப்படமான ‘எகோ’ ஒரு தலைசிறந்த படைப்பு. அனைத்து உயரிய பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். அவர் தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்” என கூறியுள்ளார்.EKO the Malayalam film is a masterpiece. Actor Biana momin deserves all the highest honours. World class performance.

மூலக்கதை