விஜய்யின் “தெறி” திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு
அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தெறி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருந்தார் இந்நிலையில், ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , ‘தெறி’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.As per the request from the producers of upcoming releases, we have decided to postpone the release of "Theri".




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
