“ஹாட் ஸ்பாட் 2 மச்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘திட்டம் இரண்டு, அடியே’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘ஹாட் ஸ்பாட்’ என்ற படம் வெளியானது. இத்திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே படத்தில் நான்கு கதைகளம் அமைந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்ற படத்தினை இயக்கிள்ளார். இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது.Trending at #5 on YouTube! #Hotspot2much Trailer continues its strong run with massive audience love ❤️ Watch the trailer:https://t.co/lRicS1481Z @_KJB_TALKIES @KJB_iamBala @a2e_cinemasco @aneelkreddy @thevishnuvishal @VVStudioz @vikikarthick88@priya_Bshankar @i_amak pic.twitter.com/WEPPlFpapo




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
