98வது ஆஸ்கர் விருது போட்டியில் நுழைந்த “கெவி”
தமிழ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி வெளியான படம் ‘கெவி’. இதில் அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடித்திருந்தார். மேலும், ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராசி தங்கதுரை வசனம் எழுதிய இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலசுப்பிரமணியன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கொடைக்கானல் அருகிலுள்ள மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான இந்த படம் திரையரங்குகளில் வரவேற்பை பெற்றது.‘கெவி’ படம் 98-வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. அகாடமி உறுப்பினர்கள் ஜனவரி 12 முதல் 16 வரை இறுதி நாமினேஷன்களுக்கான வாக்குப்பதிவை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரப்பூர்வ நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட உள்ளது. 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா, 2026 மார்ச் 15 அன்று அமெரிக்காவின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
