தொடர்ந்து போராடுங்கள்... உதவி வந்துகொண்டிருக்கிறது; ஈரான் மக்களுக்கு டிரம்ப் ஆதரவு
வாஷிங்டன், ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் 31 மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது. போராட்டத்தை கமேனி தலைமையிலான அரசு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், ஈரானில் போராடி வரும் மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். மேலும், ஈரான் மக்களுக்கு உதவி வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தேசபக்தர்களே தொடர்ந்து போராடுங்கள். உங்கள் அரசை கட்டுப்பாட்டுக்குள் எடுங்கள். கொலைகாரர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களின் பெயர்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அதிக விலை கொடுக்கப்போகிறார்கள். போராட்டக்காரர்களை அர்த்தமற்ற முறையில் படுகொலை செய்வது நிறுத்தப்படும்வரை ஈரான் அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்பையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்து கொண்டிருக்கிறது’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
