பிரிக்ஸ் அமைப்பு உச்சி மாநாடு சின்னம் வெளியீடு
புதுடெல்லி, இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இதனையடுத்து 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் சின்னம், கருப்பொருள் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சின்னம், கருப்பொருள் ஆகியவற்றை வெளியிட்டார். விழாவில் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது:- இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம், அதிக உலகளாவிய நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் ஆற்றலை ஒன்றிணைக்க முயற்சிக்கும். இந்த நேரத்தில் இந்தியா தலைமை ஏற்பது பிரிக்ஸ் அமைப்பின் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி மனிதநேயத்திற்கும் முதலிடம் மற்றும் மக்கள் அணுகுமுறையுடன் இந்தியா தனது தலைமைப்பொறுப்பை அணுகிறது. எங்கள் தலைமைத்துவத்தின் கருப்பொருள்,மீள்தன்மை, புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றூம் நிலைத்தன்மைக்காக கட்டியெழுப்புதல் என்பதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
