போகி பண்டிகை: புதுச்சேரியில் நாளை விடுமுறை
புதுச்சேரி, பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) 4நாட்கள் தொடர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில், போகியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. நாளை விடுமுறையை ஈடுசெய்ய வரும் 31-ல் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் மூலம் போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் எனத் தமிழர் திருநாளை அரசு அலுவலர்கள், மாணவ-மாணவியர் என உற்சாகமாகக் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
