தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
புதுடெல்லி, விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் 'வளர்ந்த இந்தியா' எனும் பொருளில் 'விக்சித் பாரத்' என்ற தலைப்பில் டெல்லி பாரத் மண்டபத்தில் 29-வது தேசிய இளையோர் திருவிழா கடந்த 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, ''மை பாரத்'' என்ற இணையதளம் வாயிலாக 4.20 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதிலும் இருந்து 50 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வினாடி-வினா, கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் இணையவழியாகவும், நேரடியாகவும் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 300 பேர் இந்த விழாவில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி தமிழ்நாட்டில் இருந்து 82 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்படி தேர்வானவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 9-ந்தேதி பிரதமரின் சங்கராலயா, போர் நினைவு சின்னங்களை அவர்கள் பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்பின்னர், 10-ந்தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்த், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோருடன் உரையாடவும் வாய்ப்பை வழங்கினர். அதனைத் தொடர்ந்து 11-ந்தேதி இஸ்ரோ விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா, பிரசாந்த் நாயர் உள்ளிட்டோருடனும் அவர்கள் கலந்துரையாடினர். இந்த விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று(திங்கட்கிழமை) டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, 'இளைஞர்களுடன் வளர்ந்த இந்தியா' குறித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில், 'சமூக நோக்கம்' பிரிவின் கீழ் திட்டங்களை உருவாக்கிய சிறந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 சிறந்த குழுக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவும் இடம்பெற்றது. இந்த குழுவைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பா.ரித்திகா, து.சஞ்சீவ், ஆ.அழகப்பன் ஆகியோர் ''எடு4ஆட்டிசம்'' என்ற திட்டத்தை உருவாக்கி இருந்தனர். அந்த குழுவில் தமிழ்நாட்டில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பா.ரிதிகா, பிரதமரிடம் அவர்கள் உருவாக்கிய திட்டத்தை எடுத்துக்கூறும் வாய்ப்பை பெற்றார். அவர், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அவர்களுடைய திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதனை பிரதமர் மோடியும் உன்னிப்பாக கவனித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 82 பேரில் ரிதிகா என்பவரிடம் மட்டுமே பிரதமர் மோடி கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிரம்பிட வேண்டுகிறேன் - அண்ணாமலை பொங்கல் வாழ்த்து
கூடலூர்-ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் முதல் ரத்து
சென்னையில் டாஸ்மாக் கடைகள் இரு தினங்கள் மூடல்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
