நாய்க்கடி சம்பவத்திற்கு உணவு வைப்போர் தான் பொறுப்பு- சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
புதுடெல்லி, இந்தியாவில் நாய்க்கடி பிரச்சினை பெரிய விஷயமாக மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர். நாய்க்கடி விவகாரங்களைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. நாய்க்கடிகளால் குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு மரணம் அல்லது காயத்திற்கும், மிகப் பெரிய தொகையை இழப்பீடு நிர்ணயிப்போம். மேலும், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களே நாய்க்கடி சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். உணவிட வேண்டுமென்றால், நாய்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து கொண்டு போய் உணவளியுங்கள். மாநிலங்களின் கருத்துகளைக் கேட்க நாங்கள் அரை நாள் செலவிட வேண்டும். நாய்க்கடி பிரச்சினையைச் சமாளிக்க அவர்களிடம் எதாவது செயல் திட்டம் உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டும். நாங்கள் சட்டப்பூர்வ விதியை அமல்படுத்துவதை மட்டுமே விரும்புகிறோம். இது தொடர்பான விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
