கனகாவுடன் சந்திப்பு: 'கரகாட்டக்காரன்-2' வருமா? - ராமராஜன் பதில்
சென்னை,1989-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி வெளியான கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் - கனகா ஜோடியாக நடித்திருந்தனர். கரகாட்ட கலைஞர்களாக முத்தையா - காமாட்சி கதாபாத்திரத்தில் இருவரும் நடித்திருந்தனர். மெகா ஹிட்டான இந்தப் படம் வெளிவந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராமராஜன் செல்போனில் நடிகை கனகாவிடம் பேசியுள்ளார். அப்போது, தங்களை நேரில் சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால், கனகாவோ, "உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல். நானே உங்களை சந்திக்க வருகிறேன்" என்று கூறி, நேற்று சென்னை நெற்குன்றத்தில் உள்ள ராமராஜனின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. 36 ஆண்டுகளுக்கு பிறகு கனகாவை சந்தித்தது குறித்து ராமராஜன் கூறியதாவது:- சமீபகாலமாகவே கனகா தனிமையில் ஒரு வாழ்க்கை வாழ்வதாக கேள்விப்பட்டேன். அவரை பார்க்க வேண்டும் தோன்றியது. செல்போனில் தொடர்புகொண்டு பேசினேன். மறுநாள் சென்னை நெற்குன்றத்தில் உள்ள என் வீட்டுக்கே வந்துவிட்டார். என்னுடன் அமர்ந்து சாப்பிட்டார். பல விஷயங்கள் பரிமாறி மகிழ்ந்தார். கரகாட்டக்காரன்-2 படம் குறித்து ரசிகர்கள் கேட்பதை கூறினேன். அவர் மீண்டும் நடிக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் தாய், தந்தையை பறிகொடுத்து வெறுப்பில் வாழ்ந்து வரும் அவரை பார்க்க எனக்கே கஷ்டமாக இருந்தது. அவரது சந்திப்பு மலரும் நினைவுகளில் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
