டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு, வாட்டும் குளிர்; குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு
புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 3 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்று காலை 4 டிகிரி என்ற அளவில் உள்ளது. இதில், ஆயாநகர் பகுதியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரியாக பதிவாகி இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த ஞாயிறன்று இரவில் பல்வேறு இடங்களிலும் குளிர் அலை பரவியது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது. பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவாகியது. சப்தர்ஜங் நகரில் 4.8 டிகிரியாக பதிவாகி இருந்தது. அது இன்றிரவு 3 டிகிரியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று ரிட்ஜ் ஸ்டேசன் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.8 டிகிரியாகவும் இருந்தது. டெல்லியில் காற்றின் தரமும் கூட மோசமடைந்து உள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இதுதவிர, காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களின் பல பகுதிகளிலும் கடுமையான குளிர் மக்களை வாட்டி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
