நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க அணி நிர்வாகம் விருப்பம்: ஹர்ஷித் ராணா
மும்பை,நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்ஷித் ராணா கூறியதாவது,நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது. என தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
