விஜய் ஹசாரே கோப்பை : கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு தகுதி
பெங்களூரு, 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, மும்பையை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 86 ரன் எடுத்தார். பின்னர் ஆடிய கர்நாடக அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தின் முடிவை அறிய உள்ளூர் கிரிக்கெட்டுக்குரிய வி.ஜே.டி. விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக அணி 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம்- சவுராஷ்டிரா அணிகள் சந்தித்தன. இதில் முதலில் ஆடிய உத்தரபிரதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 40.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் வி.ஜே.டி.விதிமுறைப்படி சவுராஷ்டிரா அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
