புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு
புதுச்சேரி, தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும், இலவச வேட்டி, சேலை ஆகியவையும் இடம்பெறும். இதுதவிர இந்த ஆண்டு கையில் ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுக்கு ரொக்கம் வழங்க திட்டமிடப்பட்டது. அங்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டம் தான் அமலில் இருக்கிறது. அதன்படி, 2026ம் ஆண்டு பொங்கலுக்கு 4,000 ரூபாய் வழங்கலாம் என்று முதல் மந்திரி ரங்கசாமி ஏற்கனவே அறிவித்தார். இதற்காக ரூ.140 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று துணை நிலை கவர்னரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் போதிய நிதி இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கவர்னரை நேரில் சந்தித்து பேசினார். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் பொங்கல் பரிசில் சிறிய மாற்றம் செய்துள்ளனர். அதன்படி, புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதாவது, புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டு உள்ளார். இந்த உதவித்தொகை விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
