அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை, மும்பை மாநகராட்சிக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையொட்டி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலாடு, சயான் கோலிவாடா, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மக்கள் `மூன்று என்ஜின்' ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர். நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் இங்கு மட்டும்தான் `மூன்று என்ஜின்' ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி டெல்லியில் உள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருக்கிறார். தற்போது மும்பை மேயர் பதவியையும் பா.ஜனதா கைப்பற்ற உள்ளது. மும்பை மராட்டிய நகரம் அல்ல, சர்வதேச நகரம்” என்றார்.அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மும்பை மராட்டியத்தின் நகரம் அல்ல எனக்கூறிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்றார். அண்ணாமலை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து கூறியதாவது:- அண்ணாமலையின் பேச்சை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர் வேறு மாநிலத்தை சோ்ந்தவர். அது உண்மைதான். அவருக்கு இந்தி சரியாக தெரியாது. அவர் இந்தி பேச முயற்சி செய்கிறார். ஆனால் அவர் பேசியதை பிரதமர் மோடி கூறியது போல தாக்கரே சகோதரர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பம்பாய் என்ற பெயரை மும்பை என மாற்ற முக்கிய காரணமாக இருந்தவர் பா.ஜனதாவை சேர்ந்த ராம்நாயக் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
