243 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: சித்தராமையா பெருமிதம்
கலபுரகி, கர்நாடகாவின் கலபுரகி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பொய் பேசுகின்றன. உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி அரசிடம் இல்லை என்று அவர்கள் எல்லா இடங்களிலும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஜெவர்கி என்ற ஒரு தொகுதிக்கு ரூ.906 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று அப்படி அரசு திவாலாகி இருந்தால், இதற்கு சாத்தியமில்லை. இதுவரை ரூ.1.12 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளின்படி, ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன என்று கூறினார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலேயே அரசு செயல்படுகிறது. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில், 592 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியது. 243 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமிருக்கிற வாக்குறுதிகளும் வருகிற நாட்களில் நிறைவேற்றப்படும் என்றார். அவர் தொடர்ந்து, கடந்த முறை எங்கள் அரசு ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் அளித்த 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்றும் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
