’பராசக்தி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு...வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த ரவி மோகன்
சென்னை,சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ள ’பராசக்தி’ திரைப்படம், திரையரங்குகளில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. கதைக்களம், சமூக கருத்து, நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில், ரவி மோகன் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் ‘திரு’ கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது .உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன். 2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். பராசக்தி திரைப்படத்தின் வெற்றி, ரவி மோகனின் திரையுலகப் பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. Experiencing so many good emotions that took a while for me. It’s only because of all of your love and kindness toward #thiru in #parasakthi ❤️ A hug of gratitude to all my fans and the new respect it’s got me. Thank you. I’m going to be with you soon again in newer ways.… pic.twitter.com/DuALoKhz2n




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
