அனைத்து தடைகளும் கிளியர்...பொங்கலுக்கு வெளியாகும் ’வா வாத்தியார்’
சென்னை,கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தின் ரிலீஸ், பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக தள்ளிப்போனது. சமீபத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் சார்பில் ரூ. 3 கோடி 75 லட்சம் தொகைக்கான டிடி செலுத்தப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மீதி தொகையையும் செலுத்தினால் படத்தினை பொங்கலுக்கு வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாளை ஒரு நாளுக்குள் மீதமுள்ள தொகையை தயாரிப்பு தரப்பு திருப்பி செலுத்தி விடுமா? திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா என்ற குழப்பங்கள் எழுந்தது. மறுபடியும் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்ற சந்தேகங்களையும் கிளப்பியது. இந்நிலையில், அனைத்து தடைகளும் கிளியரானதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், 'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக திட்டமிட்டப்படி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்Vaathiyaar Vanduttaar! Celebrate this #Pongal with #VaaVaathiyaar ✨In cinemas from January 14 #VaaVaathiyaarPongal pic.twitter.com/wWnOCOpA2W




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
