இது பாண்டாவா? இல்லை மனிதனா?... ஜப்பான் பூங்காவில் நடந்த வித்தியாச சம்பவம்
டோக்கியோ,ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் பாண்டாக்கள் இல்லாததால், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வருகின்றனர்! பூங்காவில் இருந்த 4 பாண்டாக்களும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன் வரிக்குதிரைக்கு பதிலாக கழுதைக்கு வண்ணம் பூசியது சீனாவில் பேசுபொருளானது. ஜப்பானில் உள்ள ஒரு பூங்காவில் பாண்டாக்கள் இல்லாத நிலையில், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றனர். பூங்காவில் இருந்த நான்கு பாண்டாக்களும் சமீபத்தில் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் வருகை குறையாமல் இருக்க இந்த வித்தியாசமான முயற்சியை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பாண்டா வேடமணிந்த பணியாளர்கள் நடனம் ஆடுவதும், குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த முயற்சியை ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். இதற்கு முன், சீனாவில் ஒரு பூங்காவில் வரிக்குதிரை இல்லாத காரணத்தால், கழுதைக்கு வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
