அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து; டிரம்ப் அதிரடி
வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இதன்பின்னர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்களை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. விசாக்களுடன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள், நாட்டில் தங்கியிருக்கும்போது, தேவையான அனைத்து சட்டரீதியான விசயங்களுக்கும் உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். டிரம்பின் நிர்வாகம் இதனை கடுமையாக கடைப்பிடித்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே நடவடிக்கை பாய்ந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க சட்டங்களை மீறி நடந்து கொள்பவர்கள் குறிப்பிடும்படியாக மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தது. இதனால், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன், நாடு கடத்தவும் செய்யப்படுவார்கள். வருங்காலத்தில் அமெரிக்க விசா பெற தகுதியற்றவர்களாகவும் ஆகி விடுவார்கள். BREAKING: The State Department has now revoked over 100,000 visas, including some 8,000 student visas and 2,500 specialized visas for individuals who had encounters with U.S. law enforcement for criminal activity.We will continue to deport these thugs to keep America safe. pic.twitter.com/wuHVltw1bV




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
