தேசிய சீனியர் கூடைப்பந்து இறுதிப் போட்டி: தமிழக அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே ‘சாம்பியன்’
சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டி நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழக அணி முதல் கால்பகுதியில் 10-20 என்று பின்தங்கியது. அதில் இருந்து மீள தமிழக அணி கடுமையாக முயற்சித்த போதிலும் கடைசி வரை ரெயில்வேயின் ஸ்கோரை எட்ட முடியவில்லை. முடிவில் தமிழக அணி 69-77 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது. தமிழக வீரர் அரவிந்த் குமார் 29 புள்ளி எடுத்தும் பலன் இல்லை. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியன் ரெயில்வே அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கிடைத்தது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்திலும் நடப்பு சாம்பியனான இந்தியன் ரெயில்வே அணி பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் இறுதி ஆட்டத்தில் ரெயில்வே அணி 75-66 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை சாய்த்தது. புஷ்பா, ஹர்ஷிதா 22 மற்றும் 23 புள்ளிகள் வீதம் எடுத்து ரெயில்வே அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி 76-49 என்ற புள்ளி கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது. தொடரின் மதிப்புமிக்க வீரர், வீராங்கனையாக குர்பாஸ் சிங்கும், புஷ்பாவும் (இருவரும் ரெயில்வே அணி) தேர்வு செய்யப்பட்டனர். பரிசுகளை இந்திய கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
