ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்; காதலியை கரம் பிடிக்கிறார்...!
அபுதாபி,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இவருக்கும் ஆயிஷா முகர்ஜி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சொரவர் தவான் என்ற மகன் உள்ளார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி தம்பதி விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து அயர்லாந்தை சேர்ந்த சோபியா ஷைன் என்ற பெண்ணுடன் ஷிகர் தவானுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, நட்பு காதலாக மாறியது. சோபியா ஷைன் அமெரிக்காவை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனத்தில் இரண்டாம் துணைத்தலைவராக செயல்பட்டு வந்தார். அவர் துபாயில் உள்ள கிளையில் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஷிகர் தவானுக்கும் காதல் ஏற்பட்டது. காதலிப்பதை இருவரும் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிபடுத்தினர். இந்நிலையில், ஷிகர் தவானுக்கும் அவரது காதலி சோபியா ஷைனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தவானும், சோபியாவும் துபாயில் வசித்து வரும் நிலையில் அங்கு வைத்து நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படத்தை ஷிகர் தவான் வெளியிட்டுள்ளார். ஷிகர் தவான் , சோபியாவுக்கு அடுத்த மாதம் இந்தியாவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
