வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
கொல்கத்தா, 2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதற்கிடையே, வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது. எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது. இதற்கிடையே , வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஐ.சி.சி. போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. ஆனால் வங்காளதேச அரசு அந்த நாட்டு அணி இந்தியாவுக்கு சென்று விளையாடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டமிட்டு வருகிறது. அதாவது. வங்கதேச அணி இந்தியாவில் விளையாட உள்ள டி20 உலக கோப்பை லீக் போட்டிகளை தென்னிந்தியாவில் சென்னை அல்லது திருவனந்தபுரத்திற்கு மாற்ற ஐசிசி திட்டமிட்டு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு
அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிரம்பிட வேண்டுகிறேன் - அண்ணாமலை பொங்கல் வாழ்த்து
கூடலூர்-ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் முதல் ரத்து
சென்னையில் டாஸ்மாக் கடைகள் இரு தினங்கள் மூடல்
