வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை மந்தம்
கரகாஸ்,2024-ம் ஆண்டு வெனிசுலாவில் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாகக்கூறி அரசியல் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமை வக்கீல்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி அமெரிக்கா ராணுவத்தினர் கரகாசுக்குள் ஊடுருவி அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்தி நியூயார்க் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக போராடிய அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். அதனடிப்படையில் வெனிசுலாவில் நல்லெண்ண அடிப்படையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பாக 3 நாட்களாக தொடர்ந்து காத்திருந்து வருகிறார்கள். 2024-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 830 பேர் கைது செய்யப்பட்டநிலையில் இதுவரை 16 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மந்தக்கதியில் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை நடைபெறுவதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
