நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ரிஷப் பண்ட் விலகல்

  தினத்தந்தி
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ரிஷப் பண்ட் விலகல்

வதோதரா, நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், வலைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை