விண்ணில் புறப்பட தயாரான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடங்கியது
சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 10.17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.17 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த ஆண்டில் முதல் முறையாக 12-ந்தேதி (நாளை) இஸ்ரோ ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதன் மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
புதுக்கோட்டை: கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் மீட்பு
சதுரகிரி கோவிலுக்கு இன்று பக்தர்கள் செல்ல தடை
16 வயது சிறுமி கர்ப்பம்: தையல் தொழிலாளி கைது
வரலாறு காணாத உச்சத்தில் மல்லிகைப்பூ விலை.! கிலோ ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை
தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ரிஷப் பண்ட் விலகல்
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
