அயோத்தி ராமர் கோவிலில் தொழுகை செய்ய முயன்ற காஷ்மீர் நபர் கைது
லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று காஷ்மீரை சேர்ந்த அகமது ஷேக் (வயது 55) என்ற இஸ்லாமியர் சென்றுள்ளார். கோவிலுக்கு சென்ற அகமது ஷேக் கோவில் வளாகத்தில் இஸ்லாமிய மத வழிபாடான தொழுகை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த ஊழியர்கள், அகமது ஷேக்கை தடுத்து நிறுத்தினர். அப்போது, அகமது ஷேக் சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பினார். இதையடுத்து, அவரை போலீசில் ஒப்படைந்தனர். உடனடியாக அகமது ஷேக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை , அகமது ஷேக் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மன நல பாதிப்பிற்காக காஷ்மீரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அயோத்தி ராமர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
