குடும்ப தகராறில் 11 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் ராமண்ணா பேட்டையை சேர்ந்தவர் யஷ்வந்த் ரெட்டி. இவரது மனைவி சுஷ்மிதா (வயது 27). இந்த தம்பதிக்கு அஸ்வந்த் நந்தன் (11 மாதம்) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் அஸ்தினாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். குழந்தை பிறந்தது முதல் சுஷ்மிதா யாருடனும் பேசக்கூடாது, வெளியே செல்லக்கூடாது என்று கூறி அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை யஷ்வந்த் ரெட்டி அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, சுஷ்மிதா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து காண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுஷ்மிதாவின் தாய் லலிதா (50 வயது) என்பவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கணவரின் துன்புறுத்தல் காரணமாக தான் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
