விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தவறு இல்லை: வருமான வரித்துறை வாதம்
சென்னை, நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று கூறியிருந்தார். ஆனால், புலி படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடி பெற்றதை, வருமான வரிக்கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அபராத தொகைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சீனிவாஸ் ஆஜராகி, ''இந்த அபராத தொகையை காலதாமதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது சரியல்லை. அவர்கள் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் தரப்பில் அணுகினார்கள். தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர், இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை'' என்று வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வருகிற 23-ந் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
