ஜன நாயகன் பட விவகாரம்: "இது அப்பட்டமான அநீதி"- தணிக்கைத்துறையை சாடிய மாரி செல்வராஜ்
சென்னை, ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ‘பராசக்தி’ படத்தில் சில இடங்களில் வசனங்களை மியூட் செய்தும், சில காட்சிகளை நீக்கியும் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறை U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, ‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கு வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், வழக்கு தள்ளிப்போனதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்ற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம், நம் ஜனநாயகத்தின் மீதும், நம் படைப்புச் சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த பதிவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
