பராசக்தி அமரனைவிட ஒரு படி மேல்... நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "பராசக்தி". 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் பரிந்துரை படி யு/ஏ 16+" சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் இன்று உலகளவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு சென்றார். அப்போது, அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், "பராசக்தி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பராசக்தி அமரனைவிட ஒரு படி மேல் உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். பராசக்தி படம் உணர்வு ரீதியாக எல்லாருடைய கதையாக உள்ளது. மதுரையில் இருந்து பராசக்தி படத்தின் முதல் விமர்சனம் எனக்கு வந்துள்ளது. தணிக்கை குழுவுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன." என்று கூறியுள்ளர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
